ஈஸ்டர் தாக்குதல்  குறித்து அருட்தந்தை சிறில் காமினியின் குற்றச்சாட்டு

#SriLanka
Prathees
2 years ago
ஈஸ்டர் தாக்குதல்  குறித்து அருட்தந்தை சிறில் காமினியின் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசியல் நோக்கத்திற்காக மூடிமறைப்பதன் மூலம் உண்மையை மறைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அருட்தந்தை சிறில் காமினி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அருட்தந்தை சிறில் காமினி மேலும் தெரிவிக்கையில், 

ஏன் உண்மையை வெளிப்படுத்த முயற்சிக்கக் கூடாது.  அதை ஏன் மறைக்க முயற்சிக்க வேண்டும்? 

யாரைப் பாதுகாப்பதற்காக இவை விசாரிக்கப்படுவதில்லை?

இதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம் என்று வைத்துக் கொள்வோம். 

மிகத் தெளிவான பரிந்துரை உள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அது ஒரு பரிந்துரை. அந்த ஆணைகடகுழுவின் முதல் பரிந்துரை.

அதற்கு பிறகு,  இந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க வேண்டும் என அரசாங்கத்தின் பொறுப்பான அமைச்சர் ஒருவர் கூறுகிறார். அப்போது அரசும், சிஐடியும் இதை விசாரிக்க வேண்டும். அத்துடன்,  அரசாங்கமும் சட்டமா அதிபரும் அவ்வாறே செய்ய வேண்டும்.
இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் வேண்டும்.அதனால் அது இல்லை.

 இவை பாதுகாக்கப்படுகின்றதாக  நாங்கள் நினைக்கிறோம்  என தெரிவித்துள்ளார்.