கோட்டபாயவை சீண்டும் ரிசாட்

#Rishad Bathiudeen #Gotabaya Rajapaksa
Prathees
2 years ago
கோட்டபாயவை சீண்டும் ரிசாட்

மக்களுடைய வாழ்க்கை போராட்டம் மிகவும் கஷ்டமான நிலையில் இருப்பதாகவும் அத்தியவசியப் பொருட்களின்  விலையும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் - தம்பபண்ணி ஆப்தீன் அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அரவ் மேலும் தெரிவிக்கையில்,

உலக சந்தையிலே பெற்றோலிய பொருட்களின் விலக் குறைந்த பொழுது ஒருபோதும் நாங்கள் விலையைக் குறைக்க மாட்டோம் அதேபோன்று எதிர்காலத்திலே நாங்கள் அதிகரிக்கவும் மாட்டோம் என அரசாங்கம் கூறியது. இந்த அமைச்சரே அதைக் கூறினார்.

ஆனால் இன்று இரண்டாவது முறையாக மீண்டும் பெற்றோலுடைய விலையை அதிகரிப்பதற்கு கோரப்பட்டுள்ளது. பெற்றோல் மாத்திரமல்ல, டீசல் மற்றும் மண்ணெண்ணை போன்றவற்றின் விலையை அதிகரிப்பது என்பது எல்லாப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்குச் சமனானது.

பேக்கரி உற்பத்தியும் இன்று அதிகரிப்பதாக அறிவித்துள்ளார்கள். இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவகையிலே விலைக் கட்டுப்பாடு இல்லாமல் வியாபாரிகள் விலையைத் தீர்மானிக்கின்ற நிலையை நாங்கள் காண்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.