இன்று இலங்கை முழுவதும் இருளில் மூழ்கிறது

#SriLanka
Prathees
2 years ago
இன்று இலங்கை முழுவதும் இருளில் மூழ்கிறது

இலங்கையில் மின்வெட்டு சாதாரணமான நிகழ்வாக மாறியது பழைய கதை. 

இன்று முழுமையாக மின்வெட்டு நடைபெறுகிறது என்பது  இலங்கையின் பொருளாதாரம் மற்றும் ஆட்சியில் ஒரு கறுப்பு மற்றும் சிகப்பு புள்ளியாக பாற்க்ககூடியவாரு இருக்கின்றது என சில புத்திஜீவிகள் கூறுகிறார்கள்.

இலங்கை சில மாதங்களாக ஆட்ச்சி ரீதியில் எதிர் தரப்பாலும், எதிர் கருத்துக்காரர்களாலும் விமர்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேழையில் இப்படியான எதிர் மறை நிகழ்வுகள் ஆழும் கட்சிக்கு ஒரு தலையிடியாகவே கருதப்படுகிறது.

அந்தவகையில், இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் மின் வெட்டு ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிரப்பாக்கிகள் செயலிழந்ததன் காரணமாக இவ்வாறு மின் வெட்டு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளதன் காரணமாக இன்று (22) மின் வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாலை 6 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான காலப்பகுதியில் 30 அல்லது 45 நிமிடங்கள் வரை மின்வெட்டு ஏற்படும் என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடருமாயின், ஆட்சியிலும் அலார்ம் அடிக்கும் என சிலர் கூறுகின்றனர்.