LPL - இறுதிப்போட்டிக்கு Galle Gladiators மற்றும் Jaffna Kings அணிகள் தேர்வு

#Srilanka Cricket
Prasu
4 years ago
LPL - இறுதிப்போட்டிக்கு Galle Gladiators மற்றும் Jaffna Kings அணிகள் தேர்வு

சிலோன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு யாழ்ப்பாண கிங்ஸ் அணி இன்று  தகுதி பெற்றுள்ளது.

தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

யாழ் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.

அவிஷ்க பெர்னாண்டோ 64 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் ஆட்டமிழந்தார்.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 70 ரன்கள் எடுத்தார்.

பந்து வீச்சில் லஹிரு சமரகோன் 2 விக்கெட்டுக்களையும், மெர்ச்சன்ட் டி லாங்கே மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

211 என்ற வெற்றி இலக்கை துரத்திய தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தம்புள்ளை ஜெயன்ட்ஸ் அணி சார்பாக சமிக்க கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களைப் பெற்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4