எரிபொருள் விலையை உயர்த்த இதுவே காரணம்: மத்திய வங்கியின் ஆளுநர் 

#Ajith Nivat Cabral
Prathees
2 years ago
எரிபொருள் விலையை உயர்த்த இதுவே காரணம்: மத்திய வங்கியின் ஆளுநர் 

டொலர் நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டில் எரிபொருள் மானியங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநரை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளுக்காக வெளியேறும் அந்நிய செலாவணி குறைக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எரிபொருள் விலையை உயர்த்தினால் டொலர்களை சேமிக்க முடியும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் பெற்றோலுக்கு இந்தியா போன்ற அண்டை நாடுகள் செலுத்தும் விலையை விட எமது நாட்டின் விலைகள் நெருங்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது நாட்டில் ஒரு லீற்றர் பிரீமியம் பெற்றோல் 210 ரூபாவாகும் போது இந்தியாவில் 264 ரூபாய் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் அதிகரிப்பு இன்னும் சகிக்கக்கூடிய அளவில் இருப்பதை இது காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.