கனடாவில் உணவுப்பொருள் ஒன்றில் நோய் பரவும் அபாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

#Canada
Keerthi
2 years ago
கனடாவில் உணவுப்பொருள் ஒன்றில் நோய் பரவும் அபாயம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உணவுப்பொருள் ஒன்றில் நோய் பரவும் அபாயம் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் உறைந்த உணவு பொருட்களை விற்பனை செய்து வரும் New Alasko Limited partnership என்ற உணவு நிறுவனம் மக்களிடம் விற்பனை செய்யப்பட்ட மக்காச்சோள பாக்கெட்டுகளை திரும்ப பெற்று வருகிறது. அதாவது "சால்மோனெல்லா" என்ற நோய்க்கிருமி தனது அலாஸ்கா பிராண்ட் உறையவைக்கப்பட்ட மக்காச்சோளத்தில் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தில் உணவு நிறுவனம் இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் இந்த மக்காச்சோள பாக்கெட்டுகள் ஆல்பர்ட்டா, பிரிட்டிஷ், கொலம்பியா, Saskatchewan, கியூபெக் , மனித்தோபா உள்ளிட்ட மாகாணங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த மக்காச்சோள பாக்கெட்டுகள் மற்ற மாகாணங்களிலும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கனேடிய உணவு ஆய்வு ஏஜென்சி இந்த மக்காச்சோளத்தில் நோய் பரவும் அபாயம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட ஆய்வை தொடர்ந்து விற்பனை செய்யப்பட்ட மக்காச்சோள பாக்கெட்டுகள் மக்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டு வருகிறது.

அதேபோல் மக்காச்சோள பாக்கெட்டுகளை வாங்கியவர்கள் அதனை தயவு செய்து உண்ண வேண்டாம், வாங்கிய இடத்தில் திரும்ப கொடுத்துவிடுங்கள் அல்லது அவற்றை தூர எறிந்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் "சால்மோனெல்லா" நோய் கிருமியால் பாதிக்கப்பட்ட உணவினை கண்டுபிடிப்பது என்பது சுலபமான விஷயம் அல்ல.

இருப்பினும் அந்த நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், சிறுபிள்ளைகள் இந்த நோய்க் கிருமிகளால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.