பிக்பாஸில் கடைசிவரை தாக்குபிடிக்கும் ரெண்டே பேர்..

Prabha Praneetha
4 years ago
பிக்பாஸில் கடைசிவரை தாக்குபிடிக்கும் ரெண்டே பேர்..

விஜய் டிவியின் மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரத்தில் நிறைவடைய உள்ளதால், போட்டிகளும் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்தவகையில் இந்த வாரத்தில் பிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டில் வருகை தந்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறித்து தங்களுடைய தனிப்பட்ட அபிப்ராயத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால் பிக்பாஸ் வீட்டில் ஒரு சில சலசலப்பு நிகழ்ந்தாலும் போட்டியாளர்களின் மத்தியில் பெருமளவு ஆனந்தமே நிலவிக் கொண்டிருக்கிறது.

இன்னிலையில் வீட்டில் இருக்கும் பத்து பேரில் யார் கடைசி 106 நாட்கள் வரை தாக்குப் பிடிப்பார்கள் என்ற கேள்விக்கு பதிலை பற்றி இப்போதிருந்தே ரசிகர்கள் கணிக்கத் துவங்கிவிட்டனர்.

சோசியல் மீடியாவில் பிக்பாஸ் ரசிகர்கள் அதிகமாக பேசப்படும் இரண்டு நபர்கள் பிரியங்கா மற்றும் ராஜு இருவரை மட்டுமே.

அந்த வகையில் இவர்கள் இருவர்தான் பிக்பாஸ் வீட்டின் கடைசி நாள் வரை தாக்குப் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மக்கள் அளிக்கும் ஓட்டின் அடிப்படையில் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்களது இருப்பை பதிவு செய்து கொண்டிருப்பதால் பிரியங்கா மற்றும் ராஜு இருவருக்கும் அதிகமான ஓட்டுகளை கொடுத்து அவர்கள் கடைசி நாட்கள் வரை இருக்க போகின்றனர்.

எனவே இவர்கள் இருவரும் ஒருவர்தான் வெற்றியாளராக இருக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என தெரிந்துவிடும் எனவே அதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த 2 பேரு தான் கடைசி வரை வருவார்கள் என்றும் இதற்காக தான் விஜய்டிவி பக்காவா ப்ளான் போட்டு வருவதாகவும் சமூக தள வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4