கிரீஸ்மஸ் மரம் உருவான கதை இது. எந்த நாட்டில் உருவாந்து தெரியுமா?

Keerthi
2 years ago
கிரீஸ்மஸ் மரம் உருவான கதை இது. எந்த நாட்டில் உருவாந்து தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் மத பேதமின்றி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்த நாளின்போது திருப்பலி, குடில்கள் அமைத்தல், பரிசுப் பொருட்கள் பரிமாறுதல், குடும்பச் சந்திப்புகள், கிறிஸ்துமஸ் மரங்களை நடுதல் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பது என இந்த விழா கலை கட்டும்.

இரவு கிறிஸ்துமஸ் தாத்தா நம்மை வாழ்த்த பரிசுப் பொருட்களுடன் நடு இரவில் வருவார் என்று குழந்தைகள் ஆவலுடன் காத்து இருக்கும். 

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு பரிசுப் பொருள் கொடுக்க, பரிசுப் பொருள் வாங்கி தலைக்கு அருகே வைத்துக் கொண்டு உறங்குவது பார்க்கவே அழகுதான்.
 
உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்து பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால், கிழக்கு மரபு வழி திருச்சபைகள் யூலியின் நாள்காட்டியின்படி ஜனவரி 7ஆம் தேதி இந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

இயேசு தனது தாயின் கருவில் உருவான மார்ச் 25ஆம் தேதியே சிலுவையில் அறையப்பட்டார் என்று கூறப்படுவதும் உண்டு.
 
ஜெர்மனியே கிறிஸ்மஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுகிறது. 
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புனித போனிபேஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது மக்கள் அங்குள்ள ஓக் மரம் ஒன்றை வழிபடுவதைக் கண்டார். 

அதைக்கண்டு கோபமடைந்த அவர் அந்த மரத்தை வெட்டி வீழ்த்த அதனடியிலிருந்து உடனடியாக ஒரு கிறிஸ்மஸ் மரம் முளைத்த கதையே கிறிஸ்மஸ் மரத்தைக் குறித்து பெரும்பாலான மக்களால் சொல்லப்படும் கதை. 

அந்த மரம் முளைத்த செயலை இயேசுவின் உயிர்ப்போடு தொடர்பு படுத்தினார்.

ஆம் முன்னோரின் ஒவ்வொரு கதைக்குள்ளும் ஏதாவது உண்மை இருக்கதான் செய்கிறது.