அடிக்கடி அமெரிக்கா செல்லும் பசில் - காரணம் என்ன?

#Basil Rajapaksa
Prasu
2 years ago
அடிக்கடி அமெரிக்கா செல்லும் பசில் -  காரணம் என்ன?

பசிலுக்கும் அமெரிக்காவுக்கும் அப்பிடி இப்பிடி ஒட்டாமே. அதுதான் அவர் அமெரிக்கா போகிறாராமே.

புது வருடத்துக்குப் பின்னர் இலங்கையில் பல முன்னேற்றங்களை ஏற்ப்படுத்தி, நாடின் வளர்ச்சியை மேம்படுத்த அரச மற்றும் நாட்டின் நலன் விரும்பிகளால் பல முனைகளிலும் முன்னெடுப்புக்கள் முடக்கிவிடப்பட்டுள்ளது. 

அதில் இந்தியாவுடனான ஒற்றுமை, சீனாவை எதிற்க்காமல் அணுகவேண்டும் என்பதில் ஆழும் தரப்பு கவனமாக இருக்கிறது. 

அத்தோடு அமெரிக்காவையும் அனுசரித்து சென்றால்தான் நாம் இவ்வுலகில் வாழமுடியும் என்பது எழுதப்படாத சட்டம் என்பதையும் ஊகித்து ஆழும் தரப்பு பல காய்களை நகர்துகிறது.

அந்த வகையில் பசில் ராஜபக்சே அமெரிக்காவை சற்று அனுசரித்து செல்பவர் என்பதாலோ என்னவோ அவர் சில நல்ல விடையங்களை அமெரிக்காவை அனுசரித்து செல்கிறார்.

அனால் அவர் நாட்டின் நன்மை கருதி சில ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் அமெரிக்க விஜயம் மேற்கொள்வதாக சில தகவல்கள் கசிந்துள்ளது

இதேவேழையில்,  இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னர், இது சம்பந்தமாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் இந்த மூன்று அமைச்சர்களுடன் அரசாங்கத்தை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாது என பசில், அரச தலைவரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.