2022 இல் கட்டாயம் மரக்கறிக்குத் தட்டுப்பாடு எற்படும். மக்களுக்கு அமைச்சர் தெரிவிப்பு.

#SriLanka #Vegetable #prices
Prasu
2 years ago
2022 இல் கட்டாயம் மரக்கறிக்குத் தட்டுப்பாடு எற்படும். மக்களுக்கு அமைச்சர் தெரிவிப்பு.

அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலேயே நாட்டில் மீண்டும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

உரப் பிரச்சினையில் ஊடகங்கள் பெரும் பங்காற்றியதாகவும், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்களை நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதாக அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளதாக திரு.அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

மேலும் எமது லங்க4 ஊடக செய்தியாளர் கூறுகையில்... அடுத்த வருடம் முதல் மாதம் விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரம் வழங்கப்பட்டாலும், அறுவடையை பெறுவதற்கு மே மற்றும் ஜூன் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் திரு.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஏனைய வருடங்களின் கிறிஸ்மஸ் காலத்தில் நுவரெலியாவில் இருந்து சுமார் 200,000 கிலோ மரக்கறிகள் அனுப்பப்படும் எனவும், இந்த நத்தார் பண்டிகையின் போது நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார நிலையங்களுக்கு சுமார் 80,000 கிலோ மரக்கறிகள் அனுப்பப்படும் எனவும் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

சந்தை தேவைக்கு ஏற்ற வகையில் மரக்கறிகள் வழங்கப்படாவிட்டாலும், நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்யாமையும், நுகர்வோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்யாததும் மரக்கறி விலை வீழ்ச்சிக்கு காரணம் என அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். என எமது லங்கா4 ஊடக செய்தியாளர் கூறினார்.