பூஸ்டர் டோஸ்களை 6 மாதத்திற்கு 1 முறை போட்டுக் கொள்ள வேண்டும் ஆராய்ச்சியாளர் வெளியிட்ட தகவல்..!!!!

Keerthi
2 years ago
பூஸ்டர் டோஸ்களை 6 மாதத்திற்கு 1 முறை போட்டுக் கொள்ள வேண்டும் ஆராய்ச்சியாளர் வெளியிட்ட தகவல்..!!!!

கொரோனா தொற்று இனி நம்மிடையே பல வருடங்களாக பயணிக்க போகிறது. ஆஸ்திரேலியாவின் தேசிய மருந்தக அமைப்பு நிறுவனத்தின் தலைவர் டிரெண்ட் ட்வாமே கூறியிருப்பதாவது, கொரோனாக்கு எதிராக பூஸ்டர் டோஸ்களை 6 மாதத்திற்கு 1 முறை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும், முக கவசம் அனைவரும் நீண்ட காலத்திற்கு தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

அதன்பின்னர் வருங்காலத்தில் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை 1 வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது 2 முறையோ போட வேண்டுமா என்பதை கொரோனா வைரஸ் குறித்த தரவுகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.