இறந்த மகளின் விறுப்பத்தை நிறைவேற்றும் கனேடிய தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்...

Keerthi
2 years ago
இறந்த மகளின் விறுப்பத்தை நிறைவேற்றும் கனேடிய தந்தை செய்த நெகிழ்ச்சி செயல்...

கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட தமது மகளின் நினைவாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிதியுதவி அளிக்க இருப்பதாக தந்தை தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் பூர்வக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது Maaike Blom என்பவர் நினைவாகவே அவரது குடும்பத்தினர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிதியுதவி அளிக்க இருக்கின்றனர்.

கடந்த 3ம் திகதி திடீரென்று மாயமான Maaike Blom, நான்கு நாட்களுக்கு பிறகு பூர்வக்குடி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்துவரும் டெல்டா பொலிசார், மர்மமான மரணம் என வழக்குப் பதிந்துள்ளதுடன், ஆண் ஒருவரை கைது செய்தனர்.

ஆனால் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் குறித்த நபரை டெல்டா பொலிசார் விடுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், விசாரணை தொடர்பில் தமக்கு மேலதிக தகவல் ஏதும் தெரியாது எனவும், அதை தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை என தெரிவித்துள்ளார் Maaike Blom-ன் தந்தை.

தமது மகள் மிருகங்கள், பறவைகளிடம் அதிகம் அன்பு செலுத்தியவர் எனக் கூறும் அவர், ஆதரவற்றவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் மெக்ஸிகோவின் சான் லூகாஸில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றிற்காக நிதி திரட்ட இருப்பதாகவும், தமது மகளின் நினைவாக அதை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.