OMICRON வைரஸ் அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்தின் நிபுணர்கள் வெளியிட்ட தகவல்

Reha
2 years ago
OMICRON வைரஸ் அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்தின் நிபுணர்கள் வெளியிட்ட தகவல்

தற்போது 106 க்கு மேற்பட்ட உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் OMICRON வைரஸ் அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்தின் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர் .

தொடர் இருமல், உயர்ந்த வெப்ப நிலை கூடிய காய்ச்சல், சுவை அல்லது மணம் உணர முடியாது போதல் - என்பவை தென்படும் பட்சத்தில் மருத்துவ சிகிச்சைக்கு கவனம் செலுத்த  வேண்டும் என NHS தெரிவித்துள்ளது .

இதேவேளை, மருத்துவ நிபுணர் குழு ஒன்று வெளியிட்ட அறிக்கையில், 

  • மூக்கால்  வடிந்து கொண்டிருத்தல்
  • தலையிடி, களைப்பு, தொடர் தும்மல், 
  • தொண்டை கரகரப்பு வலி

இவை OMICRON வைரஸ் அறிகுறிகள் என தெரிவித்துள்ளனர் .

அதே நேரம், இன்னொரு குறிப்பில், தனிய உயர் வெப்பம் கூடிய காய்ச்சல்   மட்டும் உதாரணமாக  37.8 C அள‌வி‌ல் அல்லது அதற்கும் மேலாக உடலில் இருப்பின் அது நேரடியாக CORONA அல்லது OMICRON பிரச்சனை என எடுத்துக் கொள்ள முடியாது எனவும் அது வேறு விதமான நோய் தாக்கமாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது .

எனவே பதட்டம் இல்லாமல் அறிகுறிகள் தென்பட்டால் சற்று அமைதியாக இவ்வகை அறிகுறிகளுடன் ஒப்பிட்டு ஓர் முடிவை எடுத்து கொள்ளலாம் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.