கறுப்பின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த  டெஸ்மன் டுட்டு மறைந்தார்

Reha
2 years ago
கறுப்பின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த  டெஸ்மன் டுட்டு மறைந்தார்

இன பாகுபாடு நிலவிய தென் ஆப்பிரிக்காவில் துணிச்சலாக தன் இன மக்களுக்காக குரல் கொடுத்த கறுப்பின பேராயர் அதி வணக்கத்திற்குரிய டெஸ்மன் டுட்டு அவர்கள் மறைந்தார். 

கறுப்பின மக்களின் தேசத்தில் கறுப்பின மக்களின் உரிமைக்காக 1948 ம் ஆண்டிலிருந்து 1991 ம் ஆண்டு வரை, மனிதநேய செயற்பாட்டாளராக ,அடக்கப்பட்ட மக்களின் செயல் திறனாளராக 
போராடிய மாமனிதர் DESMOND TUTU தனது 90 வது வயதில் காலமானார். 

வறுமை, நோய், இன பாகுபாடு, போன்ற பலவற்றுக்கும் எதிராக தீவிரமாக தன்னை அர்ப்பணித்து போராடியதற்கு இவருக்கு 1984 ல் உலக சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

எல்லாவற்றுக்கும் மேலாக தனது நாட்டை இன வெறியர்களிடம் இருந்து மீட்பதற்காக, உலக கறுப்பின தலைவர் மறைந்த நெல்சன் மண்டேலாவுடன் மிக நெருக்கமாக இணைந்து போராடிய வீரம் மிக்க அடையாளத்தின் சின்னம் இவர். 

கறுப்பின மக்களின் ஆட்சிக்கு வழி விட்டு, இறுதியாக தென் ஆப்பிரிக்க அதிபர் பதவியில் இருந்து விடைபெற்ற DE KLERK அவ‌ர்க‌ள் மறைந்த ஒரு சில வாரங்களில், யேசு பாலனின் பிறப்பை தரிசித்து விட்டு விண்ணுலகம் சென்றுள்ளார்.