பசுமை விவசாயத்திற்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கவில்லை: ஜனாதிபதி

#Gotabaya Rajapaksa
Prathees
2 years ago
பசுமை விவசாயத்திற்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கவில்லை: ஜனாதிபதி

பசுமை விவசாயத்திற்காக தான் ஆரம்பித்த வேலைத்திட்டத்திற்கு விவசாய அமைச்சின் அதிகாரிகள் தேவையான ஆதரவை வழங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தனது பதவிக்காலத்தின் முதல் இரண்டு வருடங்களை கொவிட் தொற்றுக்காக அர்ப்பணிக்க வேண்டியிருந்தாலும்இ எஞ்சிய மூன்று வருடங்களில் தான் ஏற்றுக்கொண்ட அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய உரப்பிரச்சினை தொடர்பில் பத்திரிகை ஆசிரியர்கள் வினவிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

பசுமை விவசாயத்திற்காக தாம் ஆரம்பித்து வைத்த வேலைத்திட்டத்திற்கு விவசாய அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து உரிய ஆதரவு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பசுமை விவசாயத்திற்கு விவசாயிகளை மனதளவில் தயார்படுத்தும் பொறுப்பு அந்த அதிகாரிகளால் சரியாக நிறைவேற்றப்படவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் ஆட்சிக்கு வரும் போது இலங்கையில் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு இருந்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கோவிட் நெருக்கடிக்கு முகங்கொடுத்து சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதி துறையின் வீழ்ச்சியினால் அந்நிய செலாவணி வருமானம் வீழ்ச்சியடைந்தமை அந்த வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வலுவான வெளிநாட்டு கையிருப்பு கொண்ட ஒரு வளர்ந்த நாட்டின் பொருளாதாரத்தில் கோவிட் தாக்கத்தை விட இலங்கையின் நிலைமை வேறுவிதமாக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நிலைமையை முடிந்தவரை கட்டுப்படுத்த இறக்குமதியை நிறுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!