மத்திய வங்கி ஆளுநர் டொலர் மாஃபியாவின் கைப்பாவை: சஜித்

#Sajith Premadasa
Prathees
2 years ago
 மத்திய வங்கி ஆளுநர் டொலர் மாஃபியாவின் கைப்பாவை: சஜித்

 அடுப்பு நெருப்புக்கு பதிலாக இன்று இதய நெருப்பையே மக்கள் மரபுரிமையாக பெற்றுள்ளனர் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸுக்கு முன் எரிபொருள் விலையை உயர்த்திய அரசாங்கம் அற்புதமான கிறிஸ்துமஸ் பரிசை வழங்கியது.

கடந்த சில டொலர் கையிருப்பைக் கூட செலவு செய்து கடன் தவணையை செலுத்துவதே புத்தாண்டுக்கான அரசின் பரிசு என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மனிதாபிமான பயணத்தின் இரண்டாவது நாளை அம்பலாந்தோட்டை மக்கள் மத்தியில் உரையாற்றி ஆரம்பித்தார்.

நகர மக்கள் மற்றும் வியாபாரிகளுடன் அவர்களின் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய எதிர்க்கட்சித் தலைவர்இ "குடும்ப ஆட்சி நாட்டை சீரழிக்கும்" என்ற தலைப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த துண்டுப் பிரசுரத்தை அவர்களிடையே விநியோகித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் டொலர் மாஃபியாவின் கைப்பாவை எனவும் அவர் இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளுடனும் ஏற்றுமதியாளர்களுடனும் விளையாடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் பணியை முன்னெடுத்த ஒருவர் பதவி விலகியுள்ளதாகவும், பொதுஜன பெரமுன பொருளாதார அழிவுக்கு மூளையாக செயல்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்த குற்றத்திற்கான பொறுப்பில் இருந்து அவர்களால் விடுவிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.