எரிவாயு கசிவினால் கல்பிட்டியில் சாமாபலாகிய வீடு

#Police
Prathees
2 years ago
எரிவாயு கசிவினால் கல்பிட்டியில் சாமாபலாகிய வீடு

எரிவாயு கசிவு காரணமாக கல்பிட்டி குரக்கன்ஹேன கிராமத்தில் வீடொன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

நேற்று (27) காலை வீட்டின் உரிமையாளரின் மகள் தனது ஒரு வயது மகளுக்கு பால் காய்ச்சுவதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்ததாகவும் சிறிது நேரத்தில் பெரிய கசிவு ஏற்பட்டு அடுப்பு வெடித்து சிதறியதாகவும் குறித்த வீட்டில் வசிப்பவர்கள்  கல்பிட்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

வீட்டின் மேற்கூரை முழுவதும் தகடுகளாலும் , சுவர்கள் மரத்தாலும் அமைக்கப்பட்டிருந்தது. எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்த போது சிறுமி உட்பட 7 பேர் வீட்டிற்குள் இருந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன் அவர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளனர். மேலும் வீட்டின் உரிமையாளருக்கும் அவரது சகோதரருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகுpறது.
வீட்டில் ஒரு சிறிய மளிகைக் கடையும் நடத்தப்பட்டுவந்துள்ளது. 

தீ விபத்தின் பின்னர், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானதுடன், வீட்டில் இருந்தவர்களின் படுக்கை மட்டும் எஞ்சியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயினால் சுமார் 1.5 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்குள்ளான வீடு புத்தளம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பரிசோதிக்கப்பட்டதுடன், அரச ஆய்வாளரால் ஆய்வு செய்யப்பட வேண்டும் என கல்பிட்டி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.