வெளிநாட்டு திருமண கொள்கையை எதிர்த்து முறைப்பாடு!

Mayoorikka
2 years ago
வெளிநாட்டு திருமண  கொள்கையை எதிர்த்து முறைப்பாடு!

இலங்கையர்கள் வெளிநாட்டு பிரஜைகளை திருமணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவைப்படும் என்ற அரசாங்கத்தின் புதிய விதிமுறைகளை எதிர்த்து சட்டத்தரணி திஷ்யா வெரகொட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட திஷ்யா வெரகொட,

எனது பிள்ளைகளும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள். ஒரு நாள் அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பும் போது, ​​பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கேட்பதை நான் விரும்பவில்லை. 

அவர்கள் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ள யாருடைய அனுமதியும் தேவையில்லை.  அவர்கள் ஏன் வேறு நபர்களிடம் அனுமதி பெற வேண்டும்?  

புதிய நிபந்தனைகள் சட்டவிரோதமானது, சட்டத்திற்கு புறம்பானது, பகுத்தறிவற்றது, நியாயமற்றது, அபத்தமானது, அதிதீவிரமானவை மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் முன்னுரிமையின் அடிப்படையில் விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவை கோரினார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கூறப்படும் சுற்றறிக்கையை அமுல்படுத்த வேண்டாம் என பதிவாளர் நாயகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு  மேலும் கோரியுள்ளார்.