3 மாணவர்களுடன் கால்வாயில் விழுந்தது மோட்டார் சைக்கிள்! - ஒருவர் பலி; இருவர் காயம் 

Reha
2 years ago
3 மாணவர்களுடன் கால்வாயில் விழுந்தது மோட்டார் சைக்கிள்! - ஒருவர் பலி; இருவர் காயம் 

மரமொன்றில் மோதிய மோட்டார் சைக்கிள் கால்வாயில் விழுந்ததில் 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், மேலும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தம்புள்ளை, களுந்தாவ பரணகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனத் தம்புள்ளை பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தம்புள்ளை, பஹல அரவுல பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா தினேஷ் சத்சர ஏகநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த 15 மற்றும் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவரும் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த மாணவர்கள் நண்பன் ஒருவரின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.