130 ஆண்டுகள் பழமையான சிலைக்கு அடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கால இயந்திரம்

தொன்மையான பொருட்களை ஆராய்ச்சி செய்வதற்காக தொடர்ந்த் ஆய்வின் போது 130 ஆண்டுகள் முன்னதாக இருந்த பழமை வாய்ந்த சிலை ஒன்றை கண்ட ஆராய்ச்சியாளர்கள் அதற்கு அடியில் ஒரு பெட்டி இருந்ததை கண்டுள்ளனர்.அதனை திறந்து பார்க்கையில் அதில் கால இயந்திரம் இருந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பிற்கு பின் வெர்ஜீனியா கவர்னரான ரால்ப் நார்தம் கால இயந்திரத்தை குறித்து ட்வீட் செய்து அதில் இதுவே அனைவராலும் தேடப்பட்டு வரும் கால இயந்திரமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
மேலும் 1887 ஆம் ஆண்டு செய்தித்தாள்கள் மூலம் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் கலைபொருட்கள் நினைவு சின்னங்கள் என ஆபிரகாம் லிங்கனின் தேடப்பட்டு வந்த அரிய புகைப்படம் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவை அனைத்தும் அந்த சிலைக்கு அடியில் இருந்ததாக சொல்கின்றனர்.
அந்த பெட்டியினை எக்ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்து பார்க்கையில் அதில் சிலைக்கு அடிப்பகுதியில் முந்தைய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கால இயந்திரம் மற்றும் அதோடு மூன்று புத்தகங்கள், ஒரு துணியானது தண்ணீரில் நினைத்தப்படியும் மற்றும் அதனுடன் புகைப்படமும் ஒரு நாணயமும் இருந்துள்ளது.
மேலும் இந்த சிலையை அகற்றுவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் அவை செப்டம்பர் மாதத்தில் தான் அதற்கான தீர்ப்புகளை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.கடந்த ஆண்டு மினசோட்டாவில் வெள்ளையின போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்ட கறுபினத்தவர் ஜார்ஜ் ஃபியாலட் இறந்ததை தொடர்ந்து இந்த சிலை இன நீதிக்கான போராட்டங்களின் மையமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.



