இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா: மக்களுக்கு அறிவுறுத்தல்களை அளித்த அரசு

Keerthi
2 years ago
இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா: மக்களுக்கு அறிவுறுத்தல்களை அளித்த அரசு

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்படும் அழிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் மேலும் பீதியை அதிகரிக்கும் வகையில், கோவிட் -19-ன் புதிய மாறுபாடான ஓமிக்ரான் (Covid-19 Omicron Variant) வேகமாகப் பரவி வருகிறது.

புத்தாண்டை வரவேற்கும் வகையில் கொண்டாட்டங்களுக்கு தயாராக இருந்த மக்கள் முன்னால் கொரோனா வைரஸ் பெரும் கிரகணமாக கிளம்பியுள்ளது.

இதற்கிடையில், தொற்றுநோயைத் தவிர்க்க மக்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை விளக்கி இங்கிலாந்து அரசாங்கம் சில ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

சில எளிய நடவடிக்கைகளால் கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்:

ஓமிக்ரான் மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அதிக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, சுகாதார ஊழியர்கள் கடினமாக உழைத்து வருகிறார்கள். சில எளிய நடவடிக்கைகளின் மூலம், கொரோனா வைரசிலிருந்து தப்பிக்கலாம். அந்த நடவடிக்கைகளைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியவும்

முகக்கவசம் அணிவது கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. பொது இடங்களுக்குச் செல்வதற்கு முன் முகக்கவசத்தை அணிவது மிக முக்கியமாகும். கோவிட்-19 (
Covid-19
) தொற்றைத் தவிர்க்க, எப்போதும் முகக்கவசத்துடன் வெளியே செல்வது நல்லது.

2. தனி மனித இடைவெளியைப் பின்பற்றவும்

முகக்கவசத்தைப் பயன்படுத்துவதோடு, சமூக இடைவெளியையும் பின்பற்றவும். நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கூட்ட நெரிசலால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க எங்கு செல்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும்.

3. கைகளை சரியாக கழுவவும்

கரோனா வைரஸைத் தடுக்க, வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போது சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவ வேண்டும். தண்ணீர் இல்லை என்றால், உங்கள் கைகளை அவ்வப்போது ஆல்கஹால் சானிடைசர் (
Sanitizer
) மூலம் சுத்தம் செய்யுங்கள். இத்துடன் வெளியே செல்லும் போது வாய், கண், மூக்கை தொடாமல் இருப்பது நல்லது.

4. முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்

மிரரின் அறிக்கையின்படி, புத்தாண்டு தினத்துக்கு முந்தைய நாள் பொதுவாக யாரும் வேலை செய்ய விரும்புவதில்லை. ஆனால், பலருக்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆகையால், யாரெல்லாம் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியுமோ, அவர்கள் கண்டிப்பாக வீட்டிலொருந்தே வேலை செய்ய வேண்டும் என இங்கிலாந்து அரசாங்கம் கூறியுள்ளது.

5. எந்த பொருளையும் பகிராமல் இருப்பது நல்லது

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகமாக இருப்பதால், தொற்றுநோய் பரவாமல் தவிர்க்க, ஒருவருக்கொருவர் எதையும் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.

6. கொரோனா அறிகுறிகளைக் கண்டால் தனிமையில் இருக்கவும்

உங்களுக்கு கோவிட்-19 அறிகுறிகள் இருந்தாலோ அல்லது உங்கள் சோதனை நேர்மறையாக இருந்தாலோ, வீட்டிலேயே இருங்கள். மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையைப் பெறுங்கள். நீங்கள் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசியை (
Vaccination
) செலுத்திக்கொண்டிருந்தாலும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து, பரிசோதனை அறிக்கை வரும் வரை தனிமையில் இருக்கவும். சளி, இருமல், காய்ச்சல், சுவை அல்லது வாசனை இழப்பு ஆகியவை கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகளாகும்.

7. கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்

தொற்றுநோய்க்கு எதிரான ஒரே ஆயுதம் கொரோனா தடுப்பூசி என்று நம்பப்படுகிறது. நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவராக இருந்தால், உடனடியாக அதை செய்யுங்கள். இதனுடன், தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். ஏனெனில் தடுப்பூசி செலுத்திய பிறகு, நோயால் ஏற்படும் அபாயம் மிகக் குறைகிறது.