பயணிகள் விமான சேவையை விரிவுபடுத்த தீர்மானம்!

Prabha Praneetha
4 years ago
பயணிகள் விமான சேவையை விரிவுபடுத்த தீர்மானம்!

பயணிகள் விமானங்கள் மற்றும் கொள்கலன் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்திற்குள் கொள்கலன் விமானத்தை அறிமுகப்படுத்தவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் ஏற்றுமதியில் 25 வீதத்தையும் இறக்குமதியில் 27 வீதத்தையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கொண்டுள்ளது.

இதேவேளை, சுற்றுலா துறையினூடான வருமானத்தில் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4