மூன்றரை வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு: சந்தேக நபருக்கு பிணை

#Court Order
Prathees
4 years ago
மூன்றரை வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு: சந்தேக நபருக்கு பிணை

மூன்றரை வயது  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

28ஆம் திகதி குறித்த சந்தேக நபரை 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு மினுவாங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் தந்தையும் தாயும் பிரிந்து வாழ்ந்து வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சிறுமி தனது தாயின் பராமரிப்பில் உள்ளார். 

நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்காலிகமாக தனது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட போது சிறுமி பாலியல் துன்புறுத்தல் குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அறிவிப்பின் பேரில் சந்தேக நபர் மினுவாங்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி , இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

குறித்த முறைப்பாட்டின்  உண்மைத்தன்மை குறித்து நீண்ட விசாரணை நடத்துமாறு பொலிஸாருக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அந்தப் முறைப்பாடு பொய்யானது எனத் தெரிந்தால்,  முறைப்பாடு செய்தவர்கள்  மீது வழக்குப் பதிவு செய்யுமாறும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4