இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்கு ஒப்புதல்!

Mayoorikka
4 years ago
இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்கு ஒப்புதல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் மேலும் இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.இரண்டு பேருக்குப் பேராசிரியர் பதவியை வழங்குவதற்குப் 

யாழ். போதனா வைத்தியசாலை உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவயோகன் உளநலப் பேராசியராகவும், இரசாயனவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசலிங்கம் சசிகேஸ் இரசாயனவியலில் பேராசிரியராகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்று நிருபங்களுக்கமைவான தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்த கலாநிதி க.சசிகேஸ், உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவயோகன் ஆகியோரின் பதவியுயர்விற், பேரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4