வெளிநாட்டில் மீண்டும் இலங்கையர் ஒருவர் படுகொலை!

#SriLanka #Death
Nila
4 years ago
வெளிநாட்டில் மீண்டும் இலங்கையர் ஒருவர் படுகொலை!

இலங்கையர் ஒருவர் சீசெல்ஸில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீசெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் இம்மாதம் 10ஆம் திகதி அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீசெல்ஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நபர், பல நாட்களாக பணிக்கு செல்லாதமையால் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், அவர் வீட்டின் அறையில் விழுந்து கிடப்பதை கண்டு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் உயிரிழந்திருந்தமையும், பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்திருந்தமையும் தெரியவந்தது.

அதன்படி, இலங்கையரின் கொலை தொடர்பில் அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4