ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்!

Mayoorikka
4 years ago
ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்!

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் ரயில் கட்டணத்தில் திடீர் திருத்தம் செய்ய முடியாது என அவர் தெரிவித்தார்.

எரிபொருள் கட்டண அதிகரிப்பினால் பஸ் சங்கங்கள் பஸ் கட்டணத்தை 17% அதிகரிக்க வேண்டியிருந்த போதிலும், எக்காரணம் கொண்டும் ரயில் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4