சீன வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகையை அறிவித்தார்

#SriLanka #China
சீன வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகையை அறிவித்தார்

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

இதன்படி, சீன வெளிவிவகார அமைச்சர் ஜனவரி 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நினைவு தினம் அதே நேரத்தில் நினைவுகூரப்படும் என்று சீன தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4