இன்றைய வேத வசனம் 31.12.2021

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 31.12.2021

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

ஒரு பக்கம் 'டெல்டா' வகை கொரோனா வைரஸ், மறுபக்கம் 'ஒமைக்ரான்' வகை வைரஸ் தொற்று பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிதாக இவை இரண்டும் கலந்த 'டெல்மைக்ரான்' வகை கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. 

தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு வருவதால், 'பூஸ்டர் டோஸ்' வழங்கும் நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு உள்ளன.

நித்தநித்தம் இந்த வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாமரர்கள் முதல் செல்வந்தர்கள் வரை இது மிகப் பெரிய தாக்கத்தையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் வேதாகமத்தில் இதை இதைக்குறித்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. 
ஆம் இந்த கொள்ளைநோய் இயேசு கிறிஸ்து வருகையின் அடையாளங்களில் ஒன்றே. இதை மத்தேயு 24 அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து மிகவும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கொள்ளை நோய் சம்பவிக்க வேண்டியதே! இதை தடுத்து நிறுத்தும்படி ஜெபிக்க நமக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை!

உம்முடைய ராஜ்யம் வருவதாக என்று ஜெபிக்க நமக்கு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவருடைய ராஜ்ஜியம் வருவதற்கு முன் நடக்கும் அடையாளமான இந்த கொள்ளை நோய்களை தடுத்து நிறுத்தும்படி ஜெயிப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது!

ஆனால், இந்த மோசமான சூழ்நிலையில் கிறிஸ்தவர்களாகிய நாம் செய்யவேண்டியது தேவனுடைய இரக்கங்களுக்காகவும், இந்த வேதனையின் நாட்கள் குறைக்கப்படவும் மன்றாடுவதுதான்.
அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை;

தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். என்று இயேசு கிறிஸ்து நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார். (#மத்தேயு 24:22)

இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; .... இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். (மத்தேயு 24:6-8)

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; (மத்தேயு 26:41)
இயேசுவே! இந்த சூழ்நிலையை நாங்கள் மேற்கொள்ள எங்களுக்கும் எங்கள் தேசத்திற்கும் பெலன்தாரும். ஆமென்.