வர்த்கரைத் தாக்கிவிட்டு 40 லட்சத்துடன் தப்பியோடிய கொள்ளையர்கள்

Prathees
2 years ago
வர்த்கரைத் தாக்கிவிட்டு 40 லட்சத்துடன் தப்பியோடிய கொள்ளையர்கள்

அத்தனகல்ல ஹுனுபொல பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் கெப் வண்டியொன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 4 மில்லியன் ரூபா பணம் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையர்கள் தொழிலதிபரின் தலையில் சாக்கு மூட்டையை வைத்து அவரை பிணைக் கைதியாக பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் வர்த்தகர் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு தப்பி உள்ளார். ஆனால் மூன்று சந்தேக நபர்கள் வர்த்தகரின் வாகனத்துடன் தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார் கம்புராகல்ல பிரதேசத்தில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கெப் வண்டியொன்றையும் சந்தேக நபர்களை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் வேன் ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.

நேற்று (30) காலை 7.50 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டவுடன் நிட்டம்புவ மற்றும் அத்தனகல்ல பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிசிடிவி காட்சிகளை பெற்று சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற பிரதேசத்தில் உடனடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

வர்த்தகரின் கெப் வண்டி கம்புரகல்ல பிரதேசத்தில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்இ கொள்ளையிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோடீஸ்வர தொழிலதிபர் நேற்று (30ம் தேதி) காலை வங்கியில் பணத்தை வைப்பிலிடச்  செய்வதற்காக தனது கேப் வண்டியில் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

வாசல் கதவைத்  திறந்து வாகனத்தை வெளியே எடுத்துவிட்டு மீண்டும் கதவை மூட முற்பட்ட வேளையில் அருகில் மறைந்திருந்த கொள்ளையர்கள் தொழிலதிபரின் தலையில் பையால் மூடி  தலையில் தாக்கிவிட்டு கெப் வண்டி மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் வந்ததாக நம்பப்படும் வேன்இ கொள்ளை நடந்த ஹுனுபொல வீதியில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 வெயங்கொட பிரதேசத்தில் உள்ள வாகன வாடகை நிறுவனம் ஒன்றில் இருந்து வேன் பெறப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.