பிக் பாஸ் அக்ஷராவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் கிப்ட்..

Prabha Praneetha
4 years ago
பிக் பாஸ் அக்ஷராவுக்கு கிடைத்த சர்ப்ரைஸ் கிப்ட்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அக்ஷரா ரெட்டி.

80 நாட்களுக்கும் மேலாக பிக் பாஸ் வீட்டில் இருந்த அவர் கடந்த வாரம் குறைவான ஓட்டுகள் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் தற்போது தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் அக்ஷரா குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது அக்ஷராவின் பிறந்தநாளுக்கு அவருடைய அண்ணன் அவருக்கு விலை மதிப்புள்ள கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
akshara

சுமார் ஒரு கோடி மதிப்புள்ள அந்த காரை அவருடைய அண்ணன் அக்ஷராவுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் இப்படி ஒரு பரிசை எதிர்பார்க்காத அக்ஷரா சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தபடி நிற்கிறார்.

மேலும் அந்த காரின் மீது சாய்ந்து நின்றபடி அவர் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அக்ஷரா அங்கு இருப்பவர்களிடம் தனது அண்ணன் தான் தனக்கு தந்தை என்று அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்.

தற்போது அவரின் அண்ணன் கொடுத்த இந்த பரிசை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கிடைத்தால் இப்படி ஒரு அண்ணன் கிடைக்க வேண்டும் என்று கமெண்ட் அளித்து வருகின்றனர். 

அக்ஷரா அந்த காரை எடுத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ரவுண்ட் செல்வது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மேலும் இந்த எதிர்பாராத பரிசு கொடுத்த தன் அண்ணனுக்கு தன்னுடைய நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அவரின் முகத்தில் தெரியும் அந்த குழந்தைத்தனமான மகிழ்ச்சி அவரது ரசிகர்களையும் குஷியாக்கியுள்ளது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4