வரவு செலவுத் திட்டத்தால் பதுளை மேயர் பதவி நீக்கம்

#Badulla
Prathees
2 years ago
வரவு செலவுத் திட்டத்தால் பதுளை மேயர் பதவி நீக்கம்

பதுளை மாநகர சபையின் மேயர் பிரியந்த அமரசிறியை பதவி நீக்கம் செய்ய ஊவா மாகாண ஆளுநர் 
ஏ. ஜே. எம். முஸம்மில் உத்தரவிட்டுள்ளார்.

அந்த பதவிக்கு  பதில் மேயரான  அசித்த நளிந்த ரங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரியந்த அமரசிறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை மாநகர சபையின் மேயரால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 211 ஆவது பிரிவின்படி தயாரிக்கப்பட்டு, மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 213 ஆவது பிரிவின்படி வரவு செலவுத் திட்டத்தின் இறுதிப் பரிசீலனைக்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டது

2012 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க உள்ளூராட்சி நிறுவனங்களின் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 7 ஆம் பிரிவுக்கு இணங்காத காரணத்தினால்இ பதுளை மாநகர சபையின் மேயர் பதவி 31.12.2021 நள்ளிரவு முதல் மேயர் பதவி விலகுவது குறித்து பரிசீலித்து அன்று முதல் பதுளை மாநகர சபையின் மேயர் பதவி வெற்றிடமாக கருதப்பட வேண்டும் என ஏ.ஜே. எம். முஸம்மில் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.