இலங்கையை நம்பகத்தன்மையற்ற நாடாக கருத வேண்டும் - உலக மக்களுக்கு சீனா நிறுவனம் எச்சரிக்கை

#SriLanka #China
Prasu
2 years ago
இலங்கையை நம்பகத்தன்மையற்ற நாடாக கருத வேண்டும் - உலக மக்களுக்கு சீனா நிறுவனம்  எச்சரிக்கை

இலங்கையில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறும் சீனாவின் சிவின் பயோடெக் நிறுவனம் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷங்ரி லங்காவினால் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கரிம உர சரக்கு நிராகரிக்கப்பட்டதன் மூலம் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு பெரிய சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பொருட்களை இலங்கைக்கு அனுப்ப மறுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையை நம்பகத்தன்மையற்ற நாடாக கருதுமாறு அந்த நிறுவனம் உலக நாடுகளுக்கு அறிவித்துள்ளது.

கரிம உர ஒப்பந்தத்தில் இலங்கையர்கள் குழுவொன்று தமது நிறுவனத்திடம் கமிஷன் கோரியதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் உரக் களஞ்சியத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது.

ஆனால் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட சோதனையில் அவற்றில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலைமையின் அடிப்படையில், கையிருப்பு உரத்திற்காக 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்.