ஜோடி போட்டு பரவும் டெல்டா & ஒமிக்ரான்... WHO எச்சரிக்கை

#Omicron
Prasu
2 years ago
ஜோடி போட்டு பரவும் டெல்டா & ஒமிக்ரான்... WHO எச்சரிக்கை

ஒமிக்ரானுடன், டெல்டாவும் சேர்ந்து பரவுவதால் சுனாமியை போன்று கொரோனா வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை. 

தென் ஆப்பிரிக்காவில் பரவ தொடங்கி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்துள்ளார். அவர் கூறியதாவது, கொரோனா மற்றும் புதிய வகை வைரசான ஒமிக்ரான் பரவல் உலகெங்கிலும் வேகமாக பரவி வருகிறது. 

ஒமிக்ரான் வைரசுடன், டெல்டா வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சுனாமி அலை போன்று அதனுடைய திறனுக்கு அதிகமாக வேகமாக பரவி வருகிறது. டெல்டாவும், ஒமிக்ரானும் ஒன்றாக பரவுவதால் உலக நாடுகளின் சுகாதார கட்டமைப்புகளுக்கு அதிக அழுத்தம் ஏற்படும்.

கொரோனா பாசிடிவ் நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் அதிகரித்து வருவதால், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் ஒரு நாளில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலும் உலக செய்திகளைப் பார்வையிட இதில் கிலிக் செய்யவும்