19 வயது இளையர்கள் உருவாக்கிய 4315 கோடி ரூபாய் நிறுவனம்

Prasu
2 years ago
19 வயது இளையர்கள் உருவாக்கிய 4315 கோடி ரூபாய் நிறுவனம்

இந்தியாவில் 19 வயதான இளையர்கள் இருவர் தொடங்கிய மளிகைப் பொருள் விநியோக நிறுவனத்தின் மதிப்பு, ஐந்து மாதங்களிலேயே $570 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 4315 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

சிறுவயது நண்பர்களான ஆதித் பலிச்சா, கைவல்யா போஹ்ரா எனும் அந்த இளையர்கள், ஸெப்டோ (Zepto) எனும் துளிர் நிறுவனத்தை இவ்வாண்டு முற்பகுதியில் தொடங்கினர். 

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணிணிப் பொறிறியல் துறையில் பயின்ற அவர்கள், படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு நாடு திரும்பி நிறுவனத்தைத் தொடங்கினர். 

மளிகைப் பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்களையும் 10 நிமிடத்துக்குள் விநியோகிப்பது நிறுவனத்தின் நோக்கம்.   

முதலில் மும்பையில் தொடங்கிய நிறுவனம் பின்னர் பெங்களூர், புதுடெல்லி உள்ளிட்ட ஆறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. 

ஆக அண்மையில் 'வை காம்பினேட்டர்' (Y Combinator) எனும் நிறுவனம், ஸெப்டோவில் 100 மில்லியன் அமெரிக்க டாலரை (755 கோடி ரூபாய்) முதலீடு செய்தது. 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் 60 மில்லியன் டாலர் (சுமார் 450 கோடி ரூபாய்) நிதியை முதலீடாகப் பெற்றது ஸெப்டோ நிறுவனம். 

புதிய முதலீடுகளைக் கொண்டு, ஸெப்டோ நிறுவனம் மற்ற இந்திய நகரங்களுக்கு விரிவடையத் திட்டமிடுகிறது. 

அதிகத் தேவையுள்ள வட்டாரங்களில் ஸெப்டோ நிறுவனம் சிறிய கிடங்குகளை அமைத்திருக்கிறது. 

அதனுடன், கடைகள், செல்லும் பாதைகள், விநியோகிக்கும் பொருள்கள் ஆகியவற்றை முடிவுசெய்ய அது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. 

தற்போது அந்த நிறுவனம், காய்கறிகள், சமையல் பொருள்கள், தின்பண்டங்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருள்கள், வீட்டைச் சுத்தம் செய்வதற்கான பொருள்கள் என 2,500க்கும் அதிகமான பொருள்கள் விநியோகித்து வருகிறது.  

இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் இணையவழிப் பொருள் விநியோகத் துறை,  ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டிருக்கிறது. 

சுவிகி. அமெசான், ஃபிலிப்கார்ட், பிளிங்கிட், டன்ஸோ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இச்சந்தையில் போட்டி போட்டு வருகின்றன.  

மேலும் உலகச்செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யவும்