சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

Mayoorikka
2 years ago
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை!

நாட்டிலுள்ள 12 வயதுக்கும் மேற்பட்ட சகல சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுக்குமாறு விசேட வைத்திய நிபுணர்களின் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனா்.

பல்வேறு சிக்கல்களை சந்தித்துவரும் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்படுகிறது.

புதுவருடம் பிறப்பதற்கு முன்னர் 12 வயதுக்கு மேற்பட்ட சகல சிறுவர்களுக்கும் கட்டாயம் தடுப்பூசி வழங்க வேண்டுமாயின் அது மிகவும் அவசியமானது என்று கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் 
நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளாா்.

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை, விரைவில் சகல பல்கலைக்கழகங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், பல்கலை மாணவர்கள் விரைவில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமெனவும், இதன்மூலம் பல்கலைக்கழகங்களினூடாக கொரோனா பரவலடையும் வாய்ப்புகளை மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளாா்.

அதேபோன்று சுற்றுலா நடவடிக்கைகள் தவிர்த்துக்கொள்ள வேண்டிது அவசியமெனவும் மாணவர்களிடையே தொற்று பரவல் அதிகரித்தால் தொடர்ந்து பாடசாலைகளை முன்னெடுத்துச் செல்வதிலும் சிக்கல் நிலை ஏற்படுமென வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்