உலகம் முழுவதும் களைகட்டிய 2022 புத்தாண்டு...!

#world_news
உலகம் முழுவதும் களைகட்டிய 2022 புத்தாண்டு...!

உலகின் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணிக்கு 2022 ஆம் ஆண்டு பிறந்தது. ஆக்லாந்தின்  ஸ்கை டவர் மற்றும் துறைமுக பாலம் ஆகிய பகுதிகள் வண்ண லேசர் விளக்குகளால் ஜொலித்தன.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் புத்தாண்டை மக்கள் வண்ண விளக்குகளால் வரவேற்றனர். கண்கவர் வாணவேடிக்கைகள் நள்ளிரவை வண்ணமயமாக ஜொலித்தன. வண்ணங்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காண்போர் மனதை கொள்ளை கொண்டது...

தைப்பே நாட்டில் உள்ள 101 மாடி கட்டடத்தின் மீது வர்ண ஜாலங்களுடன் வாணவேடிக்கை நடைபெற்றது. எனினும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இங்கு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. 

வடகொரிய தலைநகர் பியாங்க்யாங்கில் கிம் உல் சங் சதுக்கத்தில் நாட்டின் பிரதான புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் நாடெங்கும் இருந்து வந்திருந்த பள்ளிக்குழந்தைகள் நடனமாடினர். அப்போது வாணவேடிக்கைகளும் நடைபெற்றன.  கண்களை பறிக்கும் வகையில் பட்டாசுகளை வெடித்து, பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

தென்னாப்ரிக்காவில் ஒமைக்ரான் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் அங்கு கட்டுப்பாடுகளை அரசு விலக்கிக்கொண்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் உற்சாகமாக புத்தாண்டை கொண்டாடினர். 

ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், வங்கதேசம், மியான்மார் ஆகிய நாடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

பூமியில் மட்டுமின்றி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் புத்தாண்டு விடுந்து உண்டு 2022-ம் ஆண்டை விண்வெளி வீரர்கள் வரவேற்றனர்.

மேலும் பல உலகச்செய்திகளை பார்வையிட இதில் கிலிக் செய்யுங்கள்.