உணவு தான் முக்கியம்: வட கொரிய அதிபரின் அதிரடி அறிவிப்பு

Mayoorikka
2 years ago
உணவு தான் முக்கியம்: வட கொரிய அதிபரின் அதிரடி அறிவிப்பு

இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல என்றும் வளர்ச்சி திட்டங்களில் தான் இனி முழு கவனமும் செலுத்தப்படும் என்றும் வடகொரிய  ஜனாதிபதி கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார்.

அந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்று 10 ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்திலேயே இவ்விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்த அவர்,

வடகொரியாவின் 2022ஆம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார வளர்ச்சியும், பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றமும் தான்.  

வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் 5 ஆண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயற்படுத்தப்படும். 

இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல. வளர்ச்சி திட்டங்களில் தான் இனி முழு கவனமும் செலுத்தப்படும்.

ஆனால், கொரிய தீபகற்பத்தில் வளர்ந்துவரும் நிலையற்ற இராணுவச் சூழல் காரணமாக, வடகொரிய அரசு தனது பாதுகாப்புத் திறனை தொடர்ந்து வலுப்படுத்திக்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்