ஊழியரின் கையைக் கடித்த புலிக்கு நடந்தது என்ன?

Prasu
2 years ago
ஊழியரின் கையைக் கடித்த புலிக்கு நடந்தது என்ன?

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் நேப்பிள்ஸ் (Naples) நகரில் உள்ள விலங்குத் தோட்டத்தில், துப்புரவாளரின் கையைக் கடித்த புலி சுட்டுக் கொல்லப்பட்டது.

அந்தத் துப்புரவாளர், புலி இருந்த வளாகத்தின் வேலிக்கு இடையே கையைவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர், அந்த 8 வயது மலாயாப் புலியைத் தடவிக் கொடுத்திருக்கலாம் அல்லது அதற்கு உணவு அளித்திருக்கலாம் என்று காவல்துறை கூறியது.

இரண்டுமே அனுமதியற்ற, ஆபத்தான நடவடிக்கைகள் என்று அது சொன்னது.

புலி, வேலியின் வழி ஆடவரின் கையைக் கடித்து இழுத்ததாகவும், கையை விடுவிக்க மறுத்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.

அதனால், வேறு வழியின்றிப் புலியைச் சுட நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடுமையாகக் காயமுற்ற அந்தத் துப்புரவாளர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எக்கோ (Eko) என்று அழைக்கப்பட்ட அந்தப் புலி, சுமார் ஈராண்டுக்கு முன்பு அந்தத் தோட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

மலாயன் வகைப் புலிகள் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்குபவை.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்