அமெரிக்க அதிபரும் உக்ரேனிய அதிபரும் நாளை பேச்சுவார்த்தை

Prasu
2 years ago
அமெரிக்க அதிபரும் உக்ரேனிய அதிபரும் நாளை பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் (Volodymyr Zelensky), நாளை (ஜனவரி 2) தொலைபேசி மூலம் பேச்சு நடத்தவுள்ளார்.

உக்ரேனின் அரசுரிமைக்கும் பிரதேச ஐக்கியத்துக்கும் அமெரிக்கா கொண்டுள்ள ஆதரவைத் திரு. பைடன் மறுவுறுதிப்படுத்துவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

உக்ரேனிய எல்லைப் பகுதியில், ரஷ்ய ராணுவத்தின் படைக்குவிப்பு குறித்தும் கலந்துரையாடப்படும் என்று கூறப்பட்டது.

முன்னதாக, உக்ரேன் மீது மாஸ்கோ படை எடுத்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்குத் திரு. பைடன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ரஷ்யா படை எடுத்தால், மாஸ்கோ மீது தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று திரு. பைடன் கூறினார்.

உக்ரேனிய விவகாரம் தொடர்பான பதற்றம் நிலவும்வேளையில், திரு. பைடனும் திரு. புட்டினும் வியாழக்கிழமை (டிசம்பர் 30) தொலைபேசி வழி பேசினர்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்