2021- சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சில செய்திகள்

Prasu
2 years ago
2021- சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சில செய்திகள்

2021ஆம் ஆண்டின் செய்தி அரங்கில் பெரும்பாலும் COVID-19 நோய்ப்பரவல் நிலவரமும் இயற்கைப் பேரிடர்களும் நிறைந்திருந்தன.

இருப்பினும் சில செய்திகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு

நாயாக மாறிய ஆடவர்:

கனடாவின் கியூபெக் நகரில் பெண் ஒருவர் நாய்களைக் கட்டும் கயிற்றைக் கொண்டு ஆடவர் ஒருவரை இழுத்துச் சென்றார்.

பெண்ணைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவரை விசாரித்தனர்.

தாம் தனியாக நடந்து செல்வதாகக் கூறிய அவர் கயிற்றால் கட்டப்பட்டிருப்பது நாய் என்று கூறினார்.

தாம் சட்டத்தை மீறவில்லை என்றும் அந்தப் பெண் அதிகாரிகளிடம் கூறினார்.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு:

தென்கொரியாவில் பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு முன்னர் கணவன்மார்களுக்குப் போதுமான உணவையும் வீட்டு வேலைகளையும் செய்துகொடுத்துவிட்டுச் செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

செத்துப் பிழைத்தவர்:

இந்தியாவில் விபத்தில் மாண்டதாகக் கருதப்பட்ட வாகனமோட்டியின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

பிரேதத்தை வெட்டி ஆராய்வதற்கு ஆயத்தமான மருத்துவர்கள் ஆடவருக்கு உயிர் இருந்ததைக் கண்டு அதிர்ந்துபோயினர்.

பேச்சைக் குறையுங்கள்:

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முன்னாள் தலைவர் யோஷிரோ மோரி
பெண்கள் அதிகமாகப் பேசுபவர்கள் என்று சந்திப்பு ஒன்றில் கூறினார்.

அது பெரும் சர்ச்சையாக மாறியது, அதன் பின்னர் அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார், மன்னிப்பும் கேட்டார்.

பெயர் மாற்றுவதை நிறுத்துங்கள்:

தைவானில் சுஷி உணவகம் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு மீன் பெயர் இருந்தால் இலவசமாக உணவு வழங்குவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து அங்குப் பலரும் தங்கள் பெயர்களை மீன் வகைகளாக மாற்றத்தொடங்கினர்.

அதனால் அரசாங்கம் பெயர் மாற்றுவதை நிறுத்தும்படிக் கேட்டுக்கொண்டது.

தலையிலிருந்து மகுடத்தைப் பிடுங்கிய 'Mrs World':

இலங்கையில் நடந்த அழகிப்போட்டியில் 'Mrs World' போட்டியின் முன்னாள் வெற்றியாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

'Mrs Sri Lanka' போட்டியில் வெற்றி பெற்றவரின் மகுடத்தைப் பிடுங்கி அவர் பிரச்சினை செய்தார்.

அதன் பின்னர் 'Mrs World' கைது செய்யப்பட்டார்.

ஒரே மாதத்தில் 4 முறை திருமணம் செய்த ஆடவர்:

தைவானில் வங்கி ஊழியர் ஒருவர் ஒரே மாதத்தில் 4 முறை திருமணம் செய்துள்ளார்.

தைவானில் திருமணங்களுக்கு 8 நாள்கள் வரை ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும்.

அனைத்து நாள்களையும் பயன்படுத்த ஆடவர் அந்த முயற்சியில் இறங்கினார்.

பலே மருத்துவர் :

கொசோவோவில் சிறைக்கைதி ஒருவர் கைத்தொலைபேசி ஒன்றை விழுங்கிவிட்டார்.

அவருக்குச் சிறுகாயம் கூட இல்லாமல் மிகச் சாமர்த்தியமாகக் கைத்தொலைபேசியை வயிற்றில் இருந்து வெளியில் கொண்டுவந்தார் கெட்டிக்கார மருத்துவர்.

இது 84,000 டாலரா ?

டென்மார்க்கைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் 84,000 டாலர் தொகையை அருங்காட்சியகத்திடம் வாங்கிக்கொண்டு ஓவியம் இல்லாத வெறும் தட்டியை மட்டும் அனுப்பியுள்ளார்.

ஓவியத்திற்குத் தலைப்பாகப் "பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடு" என்று அவர் எழுதியிருந்தார்.

மனைவி தொல்லை தாங்கமுடியவில்லை; என்னைச் சிறையில் அடையுங்கள்:

இத்தாலியில் போதைப்பொருள் குற்றத்திற்காக 30 வயது ஆடவர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

ஆனால் ஆடவர் " என்னால் என் மனைவியின் தொல்லையைத் தாங்கமுடியவில்லை; என்னைச் சிறையில் அடையுங்கள்" என்று காவல்துறையிடம் மன்றாடினார்.

செல்லப் பிராணிகளுக்குத் தொலைபேசியா?

ஸ்காட்லந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் செல்லப் பிராணிகளுக்குப் புதிய தொடர்பு, தகவல் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதைக்கொண்டு பிராணிகள் தங்கள் முதலாளிகளை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். 

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்