முதலாளிகளிடம் இருந்து தள்ளி வசிக்க சில பணிப்பெண்களுக்கு $1,500 வழங்கப்படுகிறது

Keerthi
2 years ago
முதலாளிகளிடம் இருந்து தள்ளி வசிக்க சில பணிப்பெண்களுக்கு $1,500 வழங்கப்படுகிறது

சில பணிப்பெண்களுக்கு முதலாளி வீட்டில் வசிக்காமல் வேறோர் இடத்தில் தங்குவதற்கு $1,500 வரை வழங்கப்படுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மனிதவள அமைச்சின் அனுமதி பெறாமல் பணிப்பெண்களை வேறோர் இடத்தில் தங்கவைப்பது சட்ட விரோதமாகும். 

சில பணிப்பெண்கள், அத்தகைய ஏற்பாட்டை விரும்புவதால் அதைச் செய்து தரும் முதலாளிகளை நாடிச் செல்கின்றனர். கடந்த ஆண்டு ஏறத்தாழ ஐம்பது பணிப்பெண்கள், தங்களை வேறோர் இடத்தில் தங்கவைக்கும் முதலாளிகளைத் தேடி சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்திருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு அறிகிறது.

“முதலாளி வீட்டில் அல்லாமல் வேறோர் இடத்தில் தங்குவது வசதியாகவும் சுதந்திரமாகவும் உள்ளது. என்னுடைய முதலாளிகளும் இந்த ஏற்பாட்டையே விரும்புகின்றனர்,” என்று பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி (உண்மையான பெயர் அல்ல) எனும் பணிப்பெண் ஒருவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர் வேலை நியமன (வேலை அனுமதி) விதிமுறைகளின்கீழ், வேலை அனுமதிச் சீட்டில் (ஒர்க் பர்மிட்) குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரியில் மட்டுமே தங்கி, வேலை செய்ய பணிப்பெண்களுக்கு அனுமதி உண்டு. 

வசிப்பிடம் வேறோர் இடமாக இருந்தால், வேலை அனுமதிச் சீட்டின் கட்டுப்பாட்டு அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமாக அனுமதி பெற வேண்டும்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்