தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் 5 உணவுகள்..!

Keerthi
2 years ago
தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும் 5 உணவுகள்..!

சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து அன்றாடம் சாப்பிடும்போது, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே பட்டியலிடப்பட்ட உணவுகளை அன்றாடம் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு வகைகள்

அவரை, துவரை, பீன்ஸ் போன்ற பருப்பு பயிறுகளில் அதிகளவு புரதம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இவற்றை உங்கள் உணவு டையட்டில் தவறாமல் சேர்த்துக்கொள்ளும்போது, நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். நோய் எதிர்ப்பு மண்டலதை வலுவாக்கக்கூடிய துத்தநாகம், இவற்றில் 12 விழுக்காட்டும் அதிகமாக உள்ளது.

முட்டை

ஊட்டச்சத்து மிக்க உணவு முட்டை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதனை நாள்தோறும் சாப்பிடுகிறோமா? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். முட்டையை நாள்தோறும் சாப்பிடுவதன் மூலம் ஜிங்க் சத்து 5 விழுக்காடுக்கும் அதிகமாக உங்களுக்கு கிடைக்கும். மேலும், இவற்றில் 9 வகையான அமினோ அமிலங்களும், நல்ல கொழுப்பும் உடலுக்கு கிடைக்கும்.

விதைகள்

ஆளி, பூசணி மற்றும் எள் போன்றவற்றில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இந்த விதைகளின் 2 மில்லி கிராம் அளவில் 13 விழுக்காடு ஜிங்க் சத்து நிறைந்திருக்கிறது. இவைதவிர, இரும்பு மற்றும் நார்ச்சத்து, ஒமேகா -3 ஆகியவையும் உங்களுக்கு கிடைக்கும். இவையெல்லாம், செல்களை வலுவாக்கும்.

ஷெல் மீன்

சிப்பி மற்றும் ஷெல் மீன்கள், நண்டுகளில் ஜிங்க் அதிகளவு குவிந்து கிடக்கிறது. மேலும் இவை குறைந்த கலோரியை கொண்டிருப்பதால் இதனை உணவாக அனைவரும் எடுத்துகொள்ளலாம். கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு ஜிங்க் தாது தேவை அதிகம் இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினருக்கு ஜிங்க் குறைபாடு இருந்தால் இந்த உணவுகளை எடுத்துகொள்ளலாம்.

டையட்டில் நாள்தோறும் இவற்றை சாப்பிடும்போது, தொற்றுநோய்கள் உங்களை பெரிய அளவில் பாதிக்காது. ஒருவேளை பாதிக்கப்பட்டால், விரைவாக குணமடையலாம்.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்