ஓமிக்ரான் நோயாளிகளிடம் கண்டுபிடிக்கப்பட்ட 2 புதிய அறிகுறிகள்.. கவனம்!

Prasu
2 years ago
ஓமிக்ரான் நோயாளிகளிடம் கண்டுபிடிக்கப்பட்ட 2 புதிய அறிகுறிகள்.. கவனம்!

ஓமிக்ரான் நோயாளிகளின் எண்ணிக்கை உலகம் முழுக்க அதிகரித்து வரும் நிலையில் 2 புதிய ஓமிக்ரான் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க ஓமிக்ரான் கேஸ்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் மொத்த ஓமிக்ரான் பாதிப்பு 1,525 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 121 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நாடுகளில் இதனால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான அறிகுறிகள்
 

ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கும் மற்ற வகை கொரோனா கொண்டவர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகள்தான் உள்ளன. ஓமிக்ரான் கொரோனா கொஞ்சம் தாக்கம் குறைவானது. இது வேகமாக பரவுகிறது என்றாலும் இதன் ஆற்றல் குறைவாக இருக்கிறது. இதனால் ஓமிக்ரானின் அறிகுறிகள் பெரும்பாலும் "mild" ஆகவே உள்ளன.

டெல்டாவில் ஏற்பட்டது போல மூச்சு பிரச்சனைகள் இதில் அதிகம் ஏற்படுத்துவது இல்லை. ஓமிக்ரான் வந்த பலருக்கு மூச்சு இறைப்பு, ஆக்சிஜன் அளவு குறைவது போன்ற அறிகுறிகள், பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. மற்றபடி தலைவலி, இருமல், மூக்கில் சளித்தொல்லை, வறண்ட தொண்டை, உடல் அதிக சோர்வாக காணப்படுதல் , லேசான காய்ச்சல், சதைகள் வலி, மூட்டுகள் வலி ஆகிய எட்டு அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.

இந்த எட்டு அறிகுறிகள்தான் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு பொதுவாக ஏற்படும் அறிகுறிகளாக உள்ளன. இந்த நிலையில்தான் புதிதாக இரண்டு அறிகுறிகள் ஓமிக்ரான் நோயாளிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. The ZOE என்று கொரோனா சோதனை அமைப்பு நடத்திய ஆய்வில் இரண்டு புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் புதிய அறிகுறி வாந்தி எடுப்பது,பசியின்மை.
 
கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு வாந்தி பாதிப்பு ஏற்பட்டால் அது ஓமிக்ரான் அறிகுறியாக கருதப்படும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் பசியின்மை இன்னொரு ஓமிக்ரான் அறிகுறியாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் நோயாளிகள் பலருக்கு பசியின்மை பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அதுவும் புதிய ஓமிக்ரான் அறிகுறியாக சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்