பெயரை மாற்றிய பெரிய நிறுவனங்கள்

Keerthi
2 years ago
பெயரை மாற்றிய பெரிய நிறுவனங்கள்

Facebook நிறுவனம் அதன் பெயரை Meta என மாற்றியுள்ளது.

மெய்நிகர்த் தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் நிலையைப் புதிய பெயர் பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டது.

ஏகபோக உரிமை விதிமீறல், அந்தரங்கம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நீடிக்கும் வேளையில் Facebook நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது.

மற்ற சில பெரிய நிறுவனங்களும் அவற்றின் பெயர்களை மாற்றியுள்ளன.

கூகள் 2015-ஆம் ஆண்டில் கூகள், அதன் பெயரை Alphabet-க்கு மாற்றியது.

அதன் வெவ்வேறு சேவைகளையும் வர்த்தகங்களையும் ஒரே பெயரின்கீழ் கொண்டுவரப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

2003-ஆம் ஆண்டில் அதன் பெயர் Altria குழுமத்துக்கு மாற்றப்பட்டது.

Philip Morris நிறுவனத்துக்குக்கீழ், அப்போது Marlboro, L&M, Chesterfield புகையிலைத் தனிமுத்திரைகளும், உணவு உற்பத்தி நிறுவனமான Kraft General Foods-உம் செயல்பட்டன.

புகையிலைப் பொருள்கள் தொடர்பான எதிர்மறையான கண்ணோட்டத்திலிருந்து Kraft-ஐப் பாதுகாக்கப் பெயர் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Nissan நிறுவனத்துக்குக்கீழ் செயல்பட்ட Datsun கார் தனிமுத்திரை 1981-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.

நிறுவனத்தின் உலகளாவிய கண்ணோட்டத்தை ஒருங்கிணைக்க, பெயர் Datsun-இலிருந்து Nissan-க்கு மாற்றப்பட்டது.

2002-ஆம் ஆண்டில் அதன் பெயர் World Wrestling Entertainment என்று மாற்றப்பட்டது.

WWF என்ற குறும்பெயரைப் பயன்படுத்துவதன் தொடர்பில் உலக வனவிலங்கு நிதியத்துடன் (World Wildlife Fund) தொடர்ந்த வழக்கை அடுத்து World Wrestling Federation அதன் பெயரை மாற்றிக்கொண்டது.

1991-ஆம் ஆண்டில் அதன் பெயர் KFC என்ற குறும்பெயருக்கு மாற்றப்பட்டது.

'Fried' அதாவது 'பொரித்த' என்ற வார்த்தையால் ஏற்படும் ஆரோக்கியமற்ற கண்ணோட்டத்தை நீக்க, பெயர் மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.   

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்