நேருக்கு நேராக எதிரியை முடிவு செய்ய வைத்த பிக்பாஸ்..

Prabha Praneetha
4 years ago
நேருக்கு நேராக எதிரியை முடிவு செய்ய வைத்த பிக்பாஸ்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடிகர் சஞ்சீவ் குறைந்த ஓட்டுகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு இன்று பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் நடைபெறுகிறது.

அதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள கார்டன் ஏரியாவில் நிறைய மாலைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றை எடுத்து போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்ய விரும்புகிறார்களோ அவர்களின் கழுத்தில் அந்த மாலையை போட வேண்டும் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார்.

அதில் முதலாவதாக வரும் சிபி, நிரூப்பிற்கு மாலை போட்டு என்னை பொறுத்த வரைக்கும் நீ நேர்மையாக ஆடவில்லை என்று கூறுகிறார். பின் இறுதி போட்டிக்கு செல்லும் டிக்கெட்டை பெற்றுள்ள அமீர், ராஜுவை நாமினேட் செய்து அவருக்கு மாலை போடுகிறார்.

பின்னர் வரும் பவானி ரெட்டி, ராஜூவுக்கு மாலையை போட்டு ஹாப்பி நாமினேஷன் என்று சொல்கிறார். அவரிடம் ராஜு நீ நேத்து ஒன்னு பேசுவ, மறுநாள் காலையில வேற மாதிரி பேசுவ என்று சொல்கிறார். இதைக் கேட்டு பவானி மிகுந்த கோபம் அடைகிறார்.

அவர்களுக்குப் பிறகு வரும் பிரியங்கா, தாமரையின் தலையில் ஒரு மலர் கிரீடத்தை வைக்கிறார். பதிலுக்கு தாமரையும், பிரியங்காவை நாமினேட் செய்து அவரது தலையில் கிரீடம் வைக்கிறார்.

சென்ற வாரம் மிகவும் மோசமாக சண்டையிட்டுக் கொண்ட இந்த இருவரும் இன்று ஒருவரையொருவர் நாமினேட் செய்து கொள்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4