எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மி தலையில் இருந்த பேன்...ஆராய்ச்சி செய்ததில் ஆச்சர்யம் அளிக்கும் முடிவுகள் (புகைப்படங்கள் உள்ளே)

Keerthi
2 years ago
எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மி தலையில் இருந்த பேன்...ஆராய்ச்சி செய்ததில் ஆச்சர்யம் அளிக்கும் முடிவுகள் (புகைப்படங்கள் உள்ளே)

எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மி ஒன்றின் தலையில் இருந்த பேன் ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் ஆச்சர்யம் அளிக்கும் முடிவுகள் வெளியாகி உள்ளன.

எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் உள்ளன. அங்கு பிரமிடுகளில், பல்வேறு இடங்களில் தரைகளிலும் மம்மிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அந்த கால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பது இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அக்கால மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் தொடங்கி வாழ்க்கை முறை வரை பல விஷயங்கள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பொதுவாக மம்மிகள் 3000-5000 வருடம் பழமையானதாக இருக்கும். சில மம்மிகள் அதைவிட பழமையானது. சமீபத்தில் கூட எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மி ஒன்றின் பற்கள் அப்படியே வீணாகாமல் பதப்படுத்தப்பட்டு இருந்ததும் கூட கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வகையில் எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மி ஒன்றின் தலையில் இருந்த பேன் ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் ஆச்சர்யம் அளிக்கும் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த ஆராய்ச்சி முடிவுகள் Molecular Biology and Evolution என்ற ஆய்வு கட்டுரையில் வெளியாகி உள்ளது. மம்மி ஒன்றின் தலையில் கண்டுபிடிக்கப்பட்ட பேனில் இந்த ஜீன் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் அந்த பேனில் அப்போதும் கூட ரத்தம் உறைந்த நிலையில் இருந்துள்ளது. அதேபோல் அந்த பேன் குஞ்சு பொரிப்பதற்காக மம்மியின் தலையில் சிமெண்ட் போன்ற பேஸ்ட் ஒன்றை சுரந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாதிரிகளைதான் வெளியே எடுத்து ஜீன் சோதனை செய்துள்ளனர்.

ஜீன் சோதனையின் முடிவில் அந்த பேனில் மனிதர்களின் டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மூலம் இந்த டிஎன்ஏ பேனுக்கு சென்று இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்துள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகள் முன் வாழ்ந்த பேன் ஒன்றில் மனித டிஎன்ஏ கண்டுபிடிக்கப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதன் மூலம் அப்போது வாழ்ந்த மனிதர்கள் குறித்து அதிகம் தெரிவித்து கொள்ள முடியும். பல திருப்பங்களை இது ஏற்படுத்த போகிறது.

இந்த டிஎன்ஏ பல புதிய ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும். அப்போதைய மனிதர்களின் உடலில் இருந்த பல்வேறு விஷயங்களை ஆராய இது உதவும். பேன் ஒன்றில் இப்படி டிஎன்ஏவை கண்டுபிடிப்போம் என்று நாங்கள் நினைக்கவே இல்லை என்று அந்த ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் உலக செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்