இன்றைய வேத வசனம் 04.01.2022

#Prayer
Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 04.01.2022

(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை  கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.  மத்தேயு 7:26

ஏரிக்கரையின் வடக்கே உள்ள மணற்குன்றால் வீடுகள் புதை மணலால் புதைந்து விடும் அபாயம் இருக்கிறது. குடியிருப்பவர்கள் வீடுகளைப் பாதுகாக்க மண் மேடுகளை அகற்ற முயற்சி செய்தும் பலன் இல்லை. அவர்கள் வீடுகள் மணலில் புதைந்து போவதைக் கண்ணெதிரே காண நேர்ந்தது. சமீபத்தில் துப்புரவு பணியை மேற்பார்வையிட்ட உள்ளூர் ஷெரிப், இதைத் தடுக்கமுடியாது என்று கூறிவிட்டார். மணற்குன்றுகள் உறுதியான அடித்தளத்திற்கு ஏற்புடைதல்ல என்பதினால், வீட்டின் சொந்தக்காரர்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் பலனில்லை. 

இயேசு, மணல் மீது கட்டும் வீடு வீணான முயற்சி என்றார். இயேசு சீஷர்களிடம் கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரித்து, அன்பின் கீழ்ப்படிதல் ஞானத்தை வெளிப்படுத்தும் என்று உறுதியாய் கூறினார்.

(மத்தேயு 7:15-23). “இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்” (வச. 24). தேவனின் வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, “அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்” (வச. 26).

நம் சூழ்நிலைகள் புதைமணல் போல வேதனைக்குள்ளும் கவலைக்குள்ளும் நம்மை அழுத்தும்போது, நம் நம்பிக்கையை கிறிஸ்து என்னும் கன்மலையின் மீது நாம் வைக்க முற்படலாம். அவர் தமது மாறாத சுபாவங்களால், அசைக்கமுடியாத அஸ்திபாரத்தை நமக்கு தந்து, நம் உறுதியான விசுவாசம் வளர உதவி செய்கிறார்.