வீட்டுக் கடனுக்கான வட்டி தொடர்பாக மத்திய வங்கியின் அறிவிப்பு

#Central Bank
Prathees
2 years ago
வீட்டுக் கடனுக்கான வட்டி தொடர்பாக மத்திய வங்கியின் அறிவிப்பு

அடமானப் பத்திரங்களில் வீட்டுக் கடன்களில் வசூலிக்கப்படும் அதிகபட்ச வட்டி விகிதங்கள் குறித்து, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாணயச் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, கடன் வழங்கிய நாளிலிருந்து முதல் 5 ஆண்டுகளுக்கு நிலையான வட்டி விகிதம்இ 
வட்டி விகிதம் என்பது மாதாந்திர சராசரி மொத்தக் கடன் விகிதத்தில் (AWPR) 200 அடிப்படைப் புள்ளிகளைச் சேர்க்கும் மிதக்கும் விகிதமாக இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு 06 மாதங்களுக்கும் வட்டி மீளாய்வு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகள் ஜனவரி 1இ 2022 முதல் அமலுக்கு வரும்.

 

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்