தேசிய உர செயலகம் திறந்து வைக்கப்பட்டது!

#Colombo
Prathees
4 years ago
தேசிய உர செயலகம் திறந்து வைக்கப்பட்டது!

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ ஆகியோரின் பங்களிப்புடன் நேற்று செத்சிறிபாய இரண்டாம் கட்டத்தின் 13வது மாடியில் தேசிய உர செயலகம் ஸ்தாபிக்கப்பட்டது.

 இந்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, 

அரசு வழங்கும் இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் விளைச்சல் குறைந்துள்ளதாக பரிசோதனையில் தெரியவந்தால் மட்டுமே பயிர் சேதத்திற்கு அரசு இழப்பீடு வழங்கும்.

தேசிய உர செயலகத்திற்கு முன்பை விட அதிக பொறுப்புகள் இருப்பதால் அந்தப் பொறுப்புகளை சுதந்திரமாகச் செயல்படுத்த விசாலமான அலுவலகம் தேவை என்பதால் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டது.

இதேவேளை, பசுமை விவசாய வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதில் தாமதமின்றி தேசிய உர செயலகத்தின் பொறுப்புகளை நிறைவேற்ற புதிய உர செயலகம் அமையும் என விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

மேலும் இலங்கை செய்திகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4