சீன உர விவகாரம் - நீதிமன்றின் இறுதி முடிவு வெளியானது!

#SriLanka #China #Court Order
Nila
2 years ago
சீன உர விவகாரம் - நீதிமன்றின் இறுதி முடிவு வெளியானது!

பக்றீரியா உள்ளிட்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உயிரினங்கள் உள்ளதாக கூறப்பட்ட உரத்தை, நாட்டிற்கு கொண்டு வந்த சீன நிறுவனத்திற்கும், உள்நாட்டு முகவர் நிறுவனத்திற்கும் பணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில், மக்கள் வங்கி உள்ளிட்ட தரப்பிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கு, கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் இணக்கப்பாட்டுடன் இன்று (03) முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி, பணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடைவுத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி பிரதீப ஹெட்டியாராட்ச்சி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனுமதி வழங்குமாறு இரு தரப்பு சட்டத்தரணிகளும் மனுவொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனுவை ஆராய்ந்த கொழும்பு வணிக மேல்நீதிமன்ற நீதிபதி, வழக்கு நடவடிக்கைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டு வர அனுமதி வழங்கியுள்ளார்.

சகல நிபந்தனைகளின் படி, தரமான உரத்தை விநியோகிப்பதற்காக முறைப்பாட்டாளர் தரப்பு நிறுவனம், 6.7 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

தரமான உரத்தை விநியோகிக்காத பட்சத்தில், சீன நிறுவனத்தினால் வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் அரசுடமையாக்கப்படும் என இரு தரப்பும் நீதிமன்றில் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளன.

தரமற்ற உரம் கொண்டுவரப்படும் பட்சத்தில், அதனை நிராகரிப்பதற்கான உரிமை முறைப்பாட்டாளர் தரப்பிற்கு உள்ளதாக நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்